கிழக்கின் கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீளவும் நியமனம்

🕔 January 31, 2019

– மப்றூக் –

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இன்று வியாழக்கிழமை இந்த நியமனத்தை வழங்கினார்.

முன்னர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.ரி. நிஸாம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளராக நியமிக்கப்பட்டதோடு, கல்விப் பணிப்பாளராக எம்.கே.எம். மன்சூர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

அப்போதைய கிழக்கு ஆளுநர் ரோஹித போகொல்லாகம இந்த நியமனத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியில், மீளவும் கிழக்கு மாகாணத்தின் கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம் மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மிகவும் குறுகிய காலமே கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய எம்.கே.எம். மன்சூர், திருகோணமலை ஷண்முகா வித்தியாலய விவகாரத்தில், முஸ்லிம்களின் ஹபாயா ஆடை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்