ஜனாதிபதியின் பாராட்டு: கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் பெற்றார்

🕔 January 31, 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

‘போதையிலிருந்து விடுதலையான நாட்டை உருவாக்குதல்’ எனும் ஜனாதிபதியின் எண்ணக்கருவினை நிறைவேற்றுவதற்காக உழைத்த பொலிஸாருக்கான பாராட்டு சான்றிதழ், திருகோணமலை கிண்ணியாவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.தௌபீக் என்வருக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த பாராட்டு வைபவம் கொழும்பில் உள்ள சுகததாச உள்ளக அரங்கில் ஜனவரி 28ம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

போதை ஒழிப்புக்காக செயற்பட்ட பொலிஸார் இதன்போது கௌரவிக்கப்பட்டார்கள்.

அந்த வகையில் சிறப்பாக போதை ஒழிப்புக்காக செயற்பட்டமைக்காக கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஏ.சீ. தௌபீக் என்பவருக்கும்  ஜனாதிபதியின் பாராட்டுச் சான்றிதழ் கிடைத்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்