படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் மஹ்ரூப் – ஹிஸ்புல்லா ஆகியோருக்கு இடையில் பேச்சு

🕔 January 30, 2019
– ஹஸ்பர் ஏ ஹலீம் –

திருகோணமலையில்  படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இன்று புதன்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இம்பெற்ற சந்திப்பில், இவர்கள் பேசிக் கொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய, திருகோணமலையில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள், மதஸ்தலங்களுக்கு சொந்தமான காணிளை விடுவிப்பது தொடர்பில், பிரதியமைச்சர் ஆளுநருக்கு எடுத்துக் கூறினார்.

மேலும் எதிர்கால அபிவிருத்திகளுக்காக தனது ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் இதன்போது ஆளுநரிடம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்