மண் அகழ்ந்தோரை நோக்கி துப்பாக்கிச் சூடு; கடலில் பாய்ந்த இருவரைக் காணவில்லை: கிண்ணியாவில் சம்பவம்

🕔 January 29, 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

கிண்ணியா கங்கைப் பாலம் – கீரைத்தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கடலில் பாய்ந்தமையினை அடுத்து காணாமல் போயுள்ளதாக  கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது.

மேற்படி இளைஞர்களை நோக்கி நோக்கி கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்தே, அவர்கள் கடலில் பாய்ந்துள்ளனர்.

குறித்த இடத்தில் மண் அகழ்வில் மூவர் ஈடுபட்டு வந்தனர். இதன்போது கடற்படை சிப்பாய் ஒருவர் இவர்களை விரட்டி – துப்பாக்கிச் சூடு நடத்தியமையினை அடுத்து,  அவர்கள் கடலில் பாய்ந்து மூழ்கியதாகவும், இதில் ஒருவர் தப்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

காணாமல் போன இரு இளைஞர்களும் கிண்ணியா – இடிமன் பகுதியை சேர்ந்தவர்களாவர்.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொது மக்களுடன் சேர்ந்து கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

சம்பவ இடத்துக்கு துறை முகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹருப் உடனடியாக வந்து, கடற்படை உயரதிகாரி பொலிஸ் உயரிகாரிகளுக்கு, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை எடுக்குமாறும் துப்பாக்கி சூடு நடத்திய படை அதிகாரிக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கனார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்