மாகாண சபைத் தேர்தலை நடத்தவில்லையென்றால், ராஜிநாமா செய்வேன்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவற்குத் தவறினால், தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டி நடத்துவதில் பிரச்சினைகள் எவையுமில்லை என்று கூறிய அவர், அதற்கு முன்னர், இவ்வருடம் நொவம்பம் 09ஆம் திகதிக்கு முன்பாக, மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை அவர் குறிப்பிட்டார்.
அப்படி நடத்தாது விட்டால், தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை, தான் ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அவர் அங்கத்துவம் வகிப்பார் எனவும், ஆனால், தலைவர் பதவியை ராஜிநாமா செய்வார் என்றும் விவரித்தார்.