மேல் மாகாண சபை உறுப்பினர் யசஸ், கார் விபத்தில் படுகாயம்

🕔 January 28, 2019

மேல் மாகாண சபை உறுப்பினரும் பிரபல நடிகருமான ரவீந்திர யசஸ் – விபத்துக்குள்ளாகி, படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக  ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் செலுத்திய கார் – மரம் ஒன்றில் மோதுண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகமவில் அமைந்துள்ள கெஸ்பேவ வீதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்