‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில், அக்கரைப்பற்றில் கருத்தரங்கு

🕔 January 27, 2019

– முன்ஸிப் அஹமட் –

‘புதிய யாப்பு நகலும், கிழக்கு முஸ்லிம்களும்’ எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை அக்கரைப்பற்றில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

ஐ.எஸ்.டி. அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் வளவாளராகக் கலந்து கொண்டார்.

இதன்போது, புதிய அரசியலமைப்பு நகலில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு, அதில் முஸ்லிம்களுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் அமையலாம் என கருதப்படும் அம்சங்களும் சுட்டிக்காட்டப்பட்டன.

நிகழ்வில் பல்வேறு துறைசார்ந்தவர்களும், புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஈடுபாடு கொண்டவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது பங்குபற்றுநர்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்மும் வழங்கப்பட்டது.

புதிய அரசியலமைப்பு நகல் தொடர்பில் முஸ்லிம்களை தெளிவுபடுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பரந்தளவில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என, இங்கு வலியுறுத்தப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்