ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு, கோட்டாவிடம் மஹிந்த தெரிவிப்பு

🕔 January 27, 2019

னாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகுமாறு, மஹிந்த ராஜபக்ஷ தனக்குக் கூறியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லங்காதீப பத்திரிகைக்கு அவர் இதனைக் கூறியுள்ளதாக,  ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அமெரிக்க பிரஜை பற்றிய பிரச்சினை தற்போது பெருமளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடமாட்டார் என்றும் கோட்டா நம்பிக்கை வெளியிட்டுள்ளதோடு, அதனால், அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாதது என்று, ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளதோடு,  அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், மைத்திபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்