கிரலாகல தூபி மீதேறிய மாணவர்கள் விவகாரம்; அமைச்சர் சஜித்துடன் பேசினார் றிசாட்

🕔 January 26, 2019

கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் குழுவை விடுதலை செய்வது தொடர்பாக, அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

அதேவேளை, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாளை மறு தினம் திங்கட்கிழமை அமைச்சர் றிசாட் நேரடியாகவும் சந்தித்து, இவ்விடயம் தொடர்பில் பேசவுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் சஜித் பிரேமதாசவுடன்  றிசாட் பதியுதீன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகையில்;

மாணவர்கள் தவறுதலாக இவ்வாறான செயலை மேற்கொண்டு விட்டதாகவும், எனவே குறித்த மாணவர்களை கருணையின்  அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும்  வேண்டினார்.

அத்துடன் அனுராதபுரம் பொலிஸ் உயர் அதிகாரிகளுடனும் பேசிய அமைச்சர் றிசாடட்; அந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

தொடர்பான செய்தி: தூபியில் ஏறி படம் எடுத்த தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்க மறியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்