பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

🕔 January 25, 2019

பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 24 பேர், நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மேற்படி கடத்தல்காரர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்மையினை அடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்