ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; ஜனாதிபதி பரிசீலிக்கிறார்: சாந்த பண்டார எம்.பி. தெரிவிப்பு

🕔 January 25, 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் நேற்று வியாழக்கிழமை அவர் இதனைக் கூறினார்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பௌத்த தேரர்கள் விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டுமன்றி, சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியும், பெப்ரவரி 04ஆம் திகதி, இலங்கையின் சுதந்திரன தினத்தன்று, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று, சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தமையும், அதனை ஜனாதிபதி விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்