ஐ.தே.கட்சித் தலைவராக ரணில் மீண்டும் தெரிவு
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் செயற்குழுக் கூட்டம், கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது முன்னைய செயற்குழு உறுப்பினர்களை அடுத்துவரும் வருடத்துக்கான செயற்குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நேற்றைய கூட்டத்தின் போது மேலும் சில பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.