ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் பௌத்த பீடங்கள் கோரிக்கை

🕔 January 22, 2019

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கையிலுள்ள பௌத்த பீடங்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக, தற்போது கடூழிய சிறைத்தண்டனையினை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையிலேயே அஸ்கிரிய பீடம், மல்வத்த பீடம், கோட்டே பீடம் மற்றும் அமரபுர மஹா பீடம் ஆகியவற்றின் மகாநாயக்க தேரர்களின் கையெழுத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மேற்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தலதா மாளிகையின் தியவதனே நில​மே பிரதீப் நிலங்கவும் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்