அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா
🕔 January 17, 2019
– அஹமட் –
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தரம் – 01 மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று வியாழக்கிழமை, அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தரம் – 01 மாணவர்களை, தரம் – 02 மற்றும் 03 மாணவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றதோடு, அதிதிகள் சம்பிரதாயபூர்வமாக அகரம் எழுதக் கற்றுக் கொடுத்தனர்.
தரம் – 01 மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், கல்வி அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் உள்ளிட்டோர் அதிதிகளாக பங்கேற்றனர்.
இதன்போது, மூத்த மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.