புதிய அரசியலமைப்பு தேவையில்லை: அஸ்கிரிய மகாநாயக தேரர்
தேர்தல்களை நடத்துவதே தற்போது முக்கியம் என்றும், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரத் தேவையில்லை எனவும் அஸ்கிரிய மகாநாயக தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன நேற்று செவ்வாய்கிழமை, அஸ்கிரிய மகாநாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்ற போது, அவர் இதனைக் கூறினார்.
புதிய அரசியலமைப்பை விடவும், மாகாண மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களைத்தான் மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர் எனவும், அமைச்சரிடம் மகாநாயக தேரர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர்; தேர்தல்களை நடத்துவதில் தமக்கு பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே இப்போதைக்கு மிகவும் முக்கியம் என்று, மகாநாயக தேரர் வலியுறுத்தியுள்ளார்.