ஜனாதிபதி மைத்திரி, பிலிபைன்ஸ் பயணமானார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்கிழமை காலை பிலிபைன்ஸ் நாட்டுக்கு உத்தியோபூர்வமாக பயணித்துள்ளார்.
அவருடன் 13 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது.
05 நாட்களைக் கொண்ட இந்தப் பயணத்தில், பிலிபைன்ஸில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
அந்த வகையில் நாளைய தினம் பிலிப்பைன்ஸ் மலகாநாங்கில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துக் கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அந்த நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேட்ரே உத்தியோகபூர்வமாக வரவேற்பார்.
இதன்போது இரு நாட்டின் ஜனாதிபதிகளுக்குமிடையிலான முக்கிய பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளது.