ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு, கட்டாரில் தொழில் புரியும் சகோதரர்கள் நிதியுதவி

🕔 January 15, 2019

‘ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உதவ முடியுமா? ‘ என்கிற தலைப்பில், டிசம்பர் 25ஆம் திகதி ‘புதிது’ செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது.

கல்முனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜெஸ்மின், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளார் என்பதையும், அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இதற்காக சுமார் 40 லட்சம் ரூபா பணம் தேவைப்படுகிறது என்பதை அந்தச் செய்தியில் தெரிவித்திருந்ததோடு, அதற்காக உதவுமாறும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தோம்.

மேற்படி செய்தியைப் படித்த கட்டார் நாட்டில் தொழில் செய்யும், கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த அன்வர் எனும் சகோதரர், தனது நண்பர்களுடன் இணைந்து 01 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவை சேகரித்து, ஊடகவியலாளர் ஜெஸ்மினுடைய வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், ஜெஸ்மினுடைய நிலை பற்றிய செய்தியை எழுதியிருந்த ஊடகவியலாளர் மப்றூக் உடன் தொடர்பு கொண்டும், மேற்படி சகோதரர் அன்வர் பேசினார்.

சக மனிதனுக்கு உதவும் இந்தப் பெருங்குணத்துக்காக அன்வர் மற்றும் அவரின் நண்பர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, உங்கள் வாழ்வில் இறைவன் பேரருள் புரியவும் பிரார்த்திக்கிறோம்.

ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்காக நீங்களும் உதவ விரும்பினால், கீழே உள்ள செய்தியைப் பார்க்கவும்.

செய்தி:  ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உங்களால் உதவ முடியுமா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்