சொந்தங்களால் கைவிடப்பட்ட 500 மன நோயாளர்கள்: பராமரிக்க முடியாத நிலையில், அங்கொட வைத்தியசாலை

🕔 January 7, 2019

னநல சிகிச்சை வழங்கும் அங்கொட வைத்தியசாலையில் சொந்தங்களால் கைவிடப்பட்ட சுமார் 500 நோயாளர்கள் தங்கியிருப்தாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களில் 350 பேர் பெண்களாவர்.

மேற்படி நோயாளர்களில் குறிப்பிட்டளவினர் ஓரளவு குணமானவர்களாக உள்ள போதும், அவர்களின் வீடுகளில் இவர்களைப் பராமரிக்கத் தாயாராக இல்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்கும் போது, அவர்களின் உறவரினர்கள் சிலர்  -பொய்யான முகவரி மற்றும் தகவல்களை வழங்கி விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறு சொந்தங்களால் கைவிடப்பட்ட நோயாளர்களுக்கான நலன்புரி உதவிகளை செய்வதற்கு வைத்தியசாலையினால் முடியாத நிலைவரம் உள்ளதாகவும், சில நிறுவனங்களே இவர்களுக்கான உதவிகளை வழங்குவதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நோயாளர்கள் இறந்தால், அவர்களுக்கான சவப் பெட்டிகளை ஒரு நிறுவனம் இலவசமாக வழங்குவதாகவும், வைத்தியசாலை நிருவாகத்தினரே இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்