வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் இன்று நியமனம்
வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அந்த வகையில்,
வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன், சப்ரகமுவ மாகாண ஆளுநராக கலாநிதி தம்ம திசாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
வடக்கு மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக பணியாற்றினார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சுரேன் ராகவன், ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.