கிழக்கு மாகாண ஆளுநராகிறார் ஆஸாத் சாலி

🕔 January 4, 2019

– மப்றூக் –

கிழக்கு மாகாண ஆளுநராக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆஸாத் சாலி நியமிக்கப்படவுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, கிழக்கு மாகாண ஆளுநராக, தான் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமையை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ஆஸாத் சாலி உறுதிப்படுத்தினார்.

கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயர், மத்திய மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை ஆஸாத் சாலி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம – கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்த நிலையிலேயே, அந்த இடத்துக்கு ஆஸாத் சாலி நியமிக்கப்படவுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படவுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

அனைத்து மாகாணங்களின் ஆளுநர் பதவிகளிலும் மாற்றங்களைச் செய்யும் பொருட்டு, ஆளுநர்களை ராஜிநாமாச் செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்