சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக, தயாசிறி நியமனம்

🕔 January 3, 2019

ஸ்ரீலங்கா சுந்திரக்க ட்சியின் புதிய செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு – தற்காலிகமாக இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச பதவி வகித்து வந்த நிலையிலேயே, தயாசிறி ஜயசேகரவுக்கு மேற்படி தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்