மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு ரவி எதிர்ப்பு: அமைச்சரவையில் குழப்பம்

🕔 January 3, 2019

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் ரவி கருணாநாயக எதிர்த்தமையினால், அமைச்சரவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

2019ஆம் ஆண்டில் இலங்கை செலுத்த வேண்டிய கடனை அடைப்பதற்கு, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 1000 மில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்தார்.

இதன்போது, மக்களின் சேமிப்புப் பணத்தைக் கொண்டு – நாட்டின் கடனை அடைக்க முடியாது என, அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஆயினும் பிரதமர்  ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் மலிக் சமரவிக்ரம மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர், நிதியமைச்சர் மங்களவின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் வழங்க வேண்டுமெனக் கூறினர்.

மேலும் மங்களவின் அமைச்சரவைப் பத்திரத்தை ரவி கருணாநாயக்க எதிர்ப்பதாயின், மாற்று யோசனையினை முன்வைக்க வேண்டும் என்றும் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

இதனையடுத்து, நிதியமைச்சர் மங்கள சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் கிடைத்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்