மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, பெப்ரல் அமைப்பு நீதிமன்றம் செல்லத் தயார்
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, நீதிமன்றம் செல்வதற்கு பெப்ரல் அமைப்பு தயாராகி வருகிறது.
பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகமொன்றுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக பெப்ரல் அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் குற்றம் சாட்டியிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.