38 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நபர் கைது
38 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சாவுடன் நபரொருவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலுப்பக்கடவை – சிப்பியாறு பிரதேசத்தில் குறித்த நபர் கைதாகியுள்ளார்.
இலுப்பக்கடவை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று இரவு 11.45 மணியளவில், கஞ்சாவுடன் மேற்படி நபர் கைது செய்யப்பட்டார்.
38 கிலோவும் 210 கிராமும் எடை கொண்ட மேற்படி கஞ்சா, 18 பொதிகளாக ஆக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
32 வயதுடைய முழங்காவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபரே, சந்தேகத்தில் கைது செய்யயப்பட்டுள்ளார்.