புது வருடத்தின் முதல் குழந்தை இத்தாலியில் பிறந்தது: பெற்றோர் இலங்கையர்

🕔 January 3, 2019

புதுவருடத்தின் முதலாவது குழந்தை இலங்கையைச் சேர்ந்த தம்பதியினருக்கு இத்தாலியில் பிறந்துள்ளது.

இதுவே, 2019ஆம் ஆண்டில் முதலாவதாகப் பிறந்த குழந்தையாகும்.

புத்தாண்டு பிறந்து 10 நொடிகளின் பிறகு, இத்தாலியின் ரோம் நகரிலுள்ள சய்ன்ற்பிலிப் நெரிஸ் வைத்தியசாலையில் இந்த குழந்தை பிறந்துள்ளது.

பிரசாத் பண்டார – பதுபாஷினி யாப்பா ஆகிய இலங்கைத் தம்பதியிருக்கு இந்தக் குழந்தை கிடைத்துள்ளது.

ரோம் நகரிலுள்ள சான் பியட்ரோ பகுதியில் இந்தத் தம்பதியினர் கடந்த சில வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இத்தாலியை கௌரவப்படுத்தும் வகையில் மேற்படி குழந்தைக்கு  இத்தாலியோ பண்டார எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குழந்தை பிறந்த வைத்தியசாலைக்கு ரோம் மேயர் சென்று, குழுந்தையின் பெற்றோருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்