சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 25 பேர், ஐ.தே.கட்சியுடன் இணைகிறார்கள்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

🕔 January 2, 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 25 பேர், விரையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர்கள் விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி அறிவிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

“ஐக்கிய தேசியக் கட்சியின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் சுயாதீனமாக இயங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

அரசியலமைப்பின்பிரகாரம் 30 அமைச்சர்களையே நியமிக்க முடியும். அரசியலமைப்பை ஜனாதிபதி அவமதித்துள்ள போதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்.

பிரதமர் படித்தவர், நல்ல மனிதர். அவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மேலும் அவர் உலக அறிவுள்ளவர். ஆகவே, அவர் அரசியலமைப்பை அவமதிக்க மாட்டார்” என்றார்.

Comments