பொலிஸ் சீருடையுடன் ‘பேஸ்புக்’கில் கலக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார

🕔 January 1, 2019

க்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, இன்று புதுவருடத்தில், பொலிஸ் சீருடை அணிந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர், பாலித ரங்கே பண்டார – பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தார். ஆயினும், அரசியல் ரீதியாக அவர் பழிவாங்கப்பட்டமை காரணமாக, பொலிஸ் சேவையிலிருந்து விலகி, அரசியலுக்குள் நுழைந்தார்.

இதன் பின்னர், பொலிஸ் சேவையில் இருந்த போது, அரசியல் பழிவாங்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் குழுவொன்றினை நியமித்தது. அந்தக் குழுவிடம் பாலித ரங்கே பண்டார செய்த முறையீட்டுக்கு அமைவாக, அவர் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டு, உதவிப் பொலிஸ் அத்தியட்சகராகவும் பதவி உயர்த்தப்பட்டார்.

2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதியிலிருந்து பாலித ரங்கே பண்டார பொலிஸ் சேவையில் மீளவும் நியமிக்கப்பட்டு, மூன்று நாட்களின் பின்னர் 27 ஆம் திகதி பொலிஸ் உதவி அத்தியட்சகராகப்  பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதே தினத்திலிருந்து ஓய்வு பெற்றதாக கருதுமாறு, மேற்படி குழு பரிந்துரைத்திருந்தது.

2016ஆம் ஆண்டு அவருக்கான நிவாரணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்