சுதந்திரக் கட்சித் தலைமையகத்தின் சாவிகள், மருதானை பொலிஸ் வசம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டுள்ள நிலையில், அதன் சாவிகள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கிணங்க, அந்தக் கட்சியின் தலைமையகம் மூடப்பட்டுள்ளது.
கொழும்பு – 10, டாலி வீதியில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சித் தலைமையகத்தின் சாவிகளைப் பெற்றுக் கொள்வதற்குப் பொறுப்பானவர்கள் எவரும் முன்வராமையின் காரணமாகவே, அவை – பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே, மீண்டும் சுதந்திரக் கட்சியின் தலைமையகம் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
வெளிநாடு சென்றிருக்கும் ஜனாதிபதி இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.