உயர்தரப் பரீட்சை பெறுபேறு: அனைத்து பிரிவுகளிலும் சிங்கள மாணவர்களே நாடளாவிய ரீதியில் முன்னிலை

🕔 December 30, 2018

.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், 167,907  மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கான நுழைவுத் தகுதியைப் பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு மொத்தமாக 321,469 பேர் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, பல்வேறு வகையான முறைகேடுகளில் ஈடுபட்ட 119 பேரின் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் அகில இலங்கை ரீதியாக முதற்தர பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களின் விபரங்கள் வருமாறு;

உயிரியல் விஞ்ஞானம் (Bio Science) 

  1. கலானி ராஜபக்ஷ – ரத்னவலி பாலிகா மகா வித்தியாலயம் – கம்பஹா
  2. ரவிந்து சசிக்கா – டி.எஸ். சேனநாயக்க வித்தியாலயம் – கொழும்பு
  3. ஆர். ஹக்கீம் கரீம் – சாஹிரா கல்லூரி – மாத்தளை

இயற்பியல் விஞ்ஞானம் (Physical Science)

  1. சதுனி விஜேகுணவர்த்தன – மாலியாதேவா வித்தியாலயம் – குருணாகல்
  2. சமிந்து லியனகே – ரிச்மன் கல்லூரி – காலி
  3. தெவிந்து விஜேசேகர – ரோயல் கல்லூரி கொழும்பு

வர்த்தகம்

  1. கசுன் விக்ரமரத்ன – மாலியாதேவா வித்தியாலயம் – குருணாகல்
  2. உச்சினி ரணவீர – ரத்னவலி பாலிகா மகா வித்தியாலயம் – கம்பஹா
  3. மாலிதி ஜயரத்த – மோசஸ் வித்தியாலயம் – கொழும்பு

கலை

  1. சேனாதி தம்யா டி அல்விஸ் – லைசம் சர்வதேச பாடசாலை – பாணந்துறை
  2. சித்மி நிமாஸி எதிரிசிங்க – மாலியாதேவா வித்தியாலயம் – குருணாகல்
  3. இசானி உமேஷா குமாரி – மகாமாய பெண்கள் கல்லூரி – கண்டி

பொறியியல் தொழில்நுட்பம்

  1. பமுதித யசாஸ் பதிரத்ன – ஆனந்தா கல்லூரி – கொழும்பு
  2. தரிந்து ஹேஸான் – ஆனந்தா கல்லூரி – கொழும்பு
  3. சேஷான் ரங்கன விஜேகோன் – மகசேன் தேசிய பாடசாலை – நிக்கவரட்டிய

Comments

புதிது பேஸ்புக் பக்கம்