அமைச்சர்களின் பொறுப்புக்களைத் தெரியப்படுத்தும், வர்த்தமானி அறிவித்தல்: இழுத்தடிப்புக்குப் பின்னர் வெளியானது

🕔 December 29, 2018

– அஹமட் –

மைச்சர்களின் கடமைகள் மற்றும் அமைச்சுக்களின் கீழ் வரும் நிறுவனங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

நேற்றைய திகதியிடப்பட்டு வெளியாகியுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் பொலிஸ் திணைக்களம், முப்படைகள் மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் ஆகியவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் வசம் பாதுகாப்பு அமைச்சு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்துக்கு குடும்பத்தினருடன் தனிப்பட்ட பயணம் சென்றிருக்கும் நிலையிலேயே, மேற்படி வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தாமதமானதன் காரணமாக, அமைச்சர்கள் தமது கடமைகளைச் செய்ய முடியாத நிலைவரம் ஏற்பட்டிருந்தது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பினருடனான முரண்பாடு காரணமாகவே, இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில், ஜனாதிபதி இழுத்தடிப்புச் செய்தார் என, விமர்சனங்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்