கடமைகளை மேற்கொள்வதில் அமைச்சர்களுக்கு சிக்கல்

🕔 December 28, 2018

புதிய அமைச்சர்கள் தமது கடமைகளை  மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சுகளின் விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமையினாலேயே, இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள், விடயதானங்கள் மற்றும் பொறுப்புக்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை.

குறித்த அமைச்சுக்களின் விடயதானங்கள், கடமைகள், அமைச்சுக்களின் கீழான நிறுவனங்கள் தொடர்பான யோசனைகள் உள்ளடக்கப்பட்டு, ஜனாதிபதி செயலாளருக்கு பிரதமரின் செயலாளர் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் இதனை வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கு ஜனாதிபதியின் அனுமதி அவசியமாகும்.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது தாய்லாந்துக்கான சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டுள்ளமையால் வர்த்தமானி வெளியிடுதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்