குருணாகல் மாவட்டத்திலிருந்து தென்கிழக்குப் பல்லைக்கழகத்துக்கு தெரிவானோருக்கு பாராட்டு
– பெரோஸா சவாஹிர் –
குருணாகல் மாவட்டத்தில் இருந்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உள்வாரியாக 2017/2018 கல்வியாண்டுக்கு தெரிவாகியுள்ளளவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக குருணாகல் மாவட்ட பட்டதாரி மாணவர் ஒன்றியம் நடத்திய இந்நிகழ்வு குருணாகல், மாகாணசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும், தென்கிழக்குப் பல்லைக்கழக கலை மற்றும் கலாசாரபீட மொழித்துறைத் தலைவி கலாநிதி எம்.ஏ.எஸ்.எப். சாதியா, தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசாரபீட மொழித்துறை பேராசிரியர் எம்.எம். றமீஸ் அப்துல்லா, தென்கிழக்கு இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி, தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியற்பீட மின் மற்றும் தொலைத்தொடர்புத் துறை தலைவர் பொறியாளர் எம். முர்ஷி, அம்பாறை மாவட்ட சமுர்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ், மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக கலாசார உதவி விரிவுரையாளர் கலாசார உதவி விரிவுரையாளர் எம்.எம். முஸ்தாக் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பல்கலைக்கழக விடயங்கள் தொடர்பில் வளவாளர்கள் மூலம், மாணவர்களும் பெற்றோர்களும் தெளிவு படுத்தப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதோடு, பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானவர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.