ஊடகவியலாளர் ஜெஸ்மினுக்கு உங்களால் உதவ முடியுமா?
– மப்றூக் –
கல்முனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜெஸ்மின், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக தற்போது அவர் இரத்தச் சுத்திகரிப்பு செய்து வரும் நிலைக்கு உள்ளாகி இருக்கின்றார்.
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டமையினால், அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக சுமார் 40 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது.
நோய்வாய்ப்பட்டுள்ள ஊடகவியலாளர் ஜெஸ்மினை நேற்று திங்கட்கிழமை மாலை, ஊடக நண்பர்கள் சென்று சந்தித்தோம்.
44 வயதுடைய ஊடகவியலாளர் ஜெஸ்மின் – இரண்டு ஆண் பிள்ளைகளின் தந்தை.
மின்னஞ்சல் பாவனை ஊடகவியலாளர்கள் மத்தியில் அரிதாக இருந்த காலகட்டத்தில், மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு படங்களுடன் உடனடிச் செய்திகளை வழங்குவதில் ஜெஸ்மின் பிரபல்யமானவர்.
பத்திரிகைகளும்; ‘படங்களும், தகவலும் – மின்னஞ்சல் ஊடாக ஜெஸ்மின்’ என்று, குறிப்பிட்டு, ஜெஸ்மினை அப்போது உச்சாகமூட்டிக் கொண்டிருந்தன.
ஊடகத்துறை மீதான விருப்பம் காரணமாக, ஓடியோடி இயங்கிக் கொண்டிருந்த ஜெஸ்மின், இப்போது நோயால் பாதிக்கப்பட்டு ஒரே இடத்தில் இருக்கின்றார்.
இறைவனின் உதவியால் ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்கான சந்தர்ப்பமொன்று நமக்குக் கிடைப்பது, மிகப் பெரும் பாக்கியமாகும்.
40 லட்சம் ரூபாயினை ஒரு குறுகிய காலப்பகுதியில், சாதாரணமான ஒரு நபரால் திரட்டியெடுப்பது முடியாத காரியமாகும்.
ஆனால், அதற்கு உதவ முடிகின்றவர்கள் ஒன்றிணையும் போது, 40 லட்சம் ரூபாவை நம்மால் திரட்டிக் கொள்ள முடியும்.
எனவே, ஊடகவியலாளர் ஜெஸ்மினுடைய வைத்தியச் செலவுக்கு, உங்களால் முடிந்த எந்தவொரு பணத் தொகையினையும் நீங்கள் வழங்கலாம். அவ்வாறு உதவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இறைவனின் பேரருள் கிடைக்க பிராத்திக்கிறேன்.
ஊடக நண்பர் ஜெஸ்மினுடைய வங்கிக் கணக்கு இலக்கம் மற்றும் விபரம் இது;
M.M.Jesmin
Account number: 112657768735
Sampath bank
Sainthamaruthu branch
இந்த விடயம் தொடர்பாக மேலும் தகவல்கள் தேவையானவர்கள், இந்தச் செய்தியை எழுதியுள்ள என்னைத் தொடர்பு கொள்ளவும் முடியும்.
மப்றூக் – தொலைபேசி இலக்கம்: 0777587406