வைத்தியசாலையிலிருந்து காணாமல் போனவர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் மீட்பு: ‘புதிது’ செய்தித்தளத்தின் முயற்சிக்குப் பலன்
– றிசாத் ஏ காதர் –
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காணாமல் போன நபர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உள சிகிச்சைப் பிரிவில் கடந்த திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நோயாளியொருவர் புதன்கிழமையன்று காணாமல் போயிருந்தார்.
அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல். இமாமுத்தீன் (வயது 45) என்பவரே இவ்வாறு காணமல் போயிருந்தார்.
குறித்த நபர் சந்தேகத்துக்கிடமான முறையில் சிறைச்சாலை சூழலில் நடமாடித் திரிந்தமையினால், மட்டக்களப்பு சிறைச்சாலை பொலிசார் இவரைக் கைது செய்து சிறைச்சாலையில் தடுத்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில், மட்டக்களப்பு சிறைச்சாலையுடன் ‘புதிது’ செய்தித்தளத்தினர் தொடர்பு கொண்டு, குறித்த நபர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையினை உறுதி செய்து கொண்டதோடு, அந்தத் தகவலைய உரிய நபரின் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து நேற்று மட்டக்களப்பு சிலைச்சாலைக்குச் சென்றிருந்த மேற்படி நபரின் உறவினர்களிடம், சிறைச்சாலை பொலிசார் குறித்த நபரை ஒப்படைத்தனர்.
மேற்படி நபர் காணாமல் போன விடயம் தொடர்பாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரை காணவில்லை: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அலட்சியம்