எதிர்க்கட்சித் தலைவர் பதவி: மஹிந்த in, சம்பந்தன் out
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்
நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய மஹிந்தவின் தெரிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஆளும் தரப்பினை அடுத்து நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள தரப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் இதுவரை காலமும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்து வந்த, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தன் – அந்தப் பதவியை இழந்துள்ளார்.