சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம்

🕔 December 18, 2018

ட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்கள். கணிசமான சந்தர்ப்பங்களில் சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களைத்தான், பாமர மக்கள் பின்பற்றத் தொடங்குகளின்றனர்.

சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனையில் ஓர் ஊர்வலம் இடம்பெற்றது. 

இதில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் அந்த சபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் , கட்சி ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர்.

மேற்படி ஊர்வலத்தில் கலந்து கொண்டோர், மோட்டார் பைக்களில் ஊர்வலமாகச் சென்றனர். இதன்போது மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அமானுல்லா உள்ளிட்ட சிலர், தலைக்கவசமின்றி மோட்டார் பைக்களில் பயணிக்கும் காட்சிகளைக் கொண்ட படங்கள், ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன

முக்கிய பதவிகளில் உள்ள இவர்கள் சட்டத்தை மதிக்காது இவ்வாறு நடந்து கொண்டமையானது  ஏற்றுக்கொள்ளக் கூடிய செயற்பாடுகளல்ல.

மறுபுறம் இவ்வாறானவர்களை பொலிஸார் கண்டும் காணாமல் விட்டுவிட்டு, சாதாரண பாரமர மக்களிடம் சட்டத்தை நிலைநாட்ட முயற்சிப்பது பாகுபாடான செயற்பாடாகும்.

மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டுவோர் கவனமெடுக்க வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்