ஜனாதிபதியின் நேற்றைய உரைக்கு, ஐ.தே.கட்சி அதிருப்தி

🕔 December 17, 2018

ணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆற்றிய உரைக்கு ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின​ர்கள் நளின் பண்டார மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் ஜனாதிபதிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த நளின் பண்டார;

கி​ராமங்களில் மங்கள நிகழ்வுகள் ஏற்பாடு பண்ணும் போது, இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசுவார்கள். இதன்போது மணமகனை சபைக்கு அழைத்து மணமகன் தரப்பில் பேசுபவர் மணமகனை விமர்சித்து பேசுவதைப் போன்றே நேற்றைய ஜனாதிபதியின் உரை அமைந்திருந்ததாக நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்