ஹமீட் மீதான தாக்குதலுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை கண்டனம்

🕔 December 16, 2018

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனையைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் கே.ஏ. ஹமீட் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.

‘அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் சிரேஷ்ட உறுப்பினரான ஊடகவியலாளர் ஹமீட் மீது, நேற்று சனிக்கிழமை இரவு மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்’  என்று
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.. நஸீரின் மருமகன் எம்.என் பர்ஸான் என்பவர், நேற்றிரவு தன்மீது தாக்குதல் நடத்தியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் ஹமீட் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஹமீட், தற்போது அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை, இதுவரையில் பொலிஸார் கைது செய்யவில்லை.

தொடர்பான செய்தி: ஊடகவியலாளர் ஹமீட் மற்றும் இளைஞர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் மருமகனுக்கு எதிராக முறைப்பாடு 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்