“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்; நாடு ஸ்தம்பிதமடைய கூடாது என்பதற்காக, இந்த முடிவுக்கு வந்துள்ளேன்”
“மத்திய வங்கியில் மோசடி செய்தவர்கள் நீங்கள்தான். ராணுவ வீரர்களை மற்றும் பிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தமை உட்பட்ட பல விடயங்களை செய்து நாட்டை மோசமான நிலைக்கு நீங்கள் தள்ளியுள்ளீர்கள்” என்று, ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி ஏற்றதன் பின்னர், ஜனாதிபதி உரை நிகழ்த்திய போது தெரிவித்துள்ளார்.
“நாடு ஸ்தம்பிதம் அடைய கூடாது என்பதற்காகவே நான் இந்த முடிவுக்கு வந்தேன். கடாபி போன்ற நிலைமை எனக்கு வரும் என்று சொன்னீர்கள். முடிந்தால் அப்படி செய்யுங்கள்” எனவும் ஜனாதிபதி இதன் போது சவால் விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.
இதன் பிறகு உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, புத்தரின் சிந்தனையொன்றினை சுட்டிக்காட்டி; வெறுப்பினை வெறுப்பினால் வெல்ல முடியாது, அன்பால் மாத்திரமே வெல்ல முடியும்” என, ஜனாதிபதிக்கு பதிலளிக்கும் வகையில் கூறியுள்ளார்.
செய்தி மூலம்: ஆர். சிவராஜா (சிரேஷ்ட ஊடகவியலாளர்)