பிரதமர் பதவியேற்க நீண்ட நேரம் காத்திருந்த ரணில்: ஜனாதிபதி வரத் தாமதமானதால் ஏற்பட்ட நிலை
பிரதமர் பதவியேற்பதற்கு ஜனாதிபதி செயலகம் சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க, அங்கு நீண்ட நேரம் காத்திருந்த செய்தி வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி வருவதற்கு தாமதமானமை காரணமாகவே, ரணில் விக்ரமசிங்க இவ்வாறு காத்திருக்க வேண்டியேற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்துக்கு 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் செல்வதற்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடப்பத்தக்கது.