பிரதமராகிறார் ரணில்: நாளை சத்தியப்பிரமாணம்

🕔 December 15, 2018

ணில் விக்கிரமசிங்க, நாளை ஞாயிற்றுக்கிழமை பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

​ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர், இத்தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனது வாழ்நாளில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிக்க மாட்டேன் எனக் கூறிவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைத்தமை சட்டவிரோதமானது என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தமையின் பின்னர், சில விட்டுக் கொடுப்புகளுக்கு தயாராக விட்டார் என, அரசியல் நோக்குநர்கள் கூறுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்