அட்டாளைச்சேனையில் தவறியோர், ஹம்பாந்தோட்டையில் மீண்டனர்: இரண்டு நாள் தவிப்பு, நிறைவுக்கு வந்தது
– மப்றூக் –
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமையன்று படகொன்றில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை சம்பந்தப்பட்ட மீனவர்களில் ஒருவருடைய உறவினர்கள் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதி செய்தனர்.
சகாப்தீன் மற்றும் கனி எனும் மேற்படி மீனவர்கள் பயணித்த படகின் இயந்திரம் பழுதடைந்தமை காரணமாக, இவர்கள் கரை திரும்ப முடியாமல் கடலில் தத்தளித்தனர்.
இவர்களை நேற்றும் இன்றும் தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில் ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில், அங்கு தொழிலுக்காகச் சென்றிருந்த மீனவர்களால், காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டதாகத் தெரியவருகிறது.
இதனையடுத்து, மேற்படி மீனவர்கள் இருவரும் அவர்களின் படகுடன் பொத்துவிலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக, அந்த மீனவர்களில் ஒருவரின் உறவினர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார்.
தொடர்பான செய்தி: கடலுக்குச் சென்ற அட்டாளைச்சேனை மீனவர்கள், இரண்டு நாட்களாக கரை திரும்பவில்லை; தேடும் பணி தொடர்கிறது http://puthithu.com/?p=37984