நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, அரசியலமைப்புக்கு முரண்: தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்

🕔 December 13, 2018

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமை,  அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.

நாடாளுமன்றத்தை கலைப்பதாக நொவம்பர் 09ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இந்த அறிவித்தலை எதிர்த்து நொவம்பர் 12ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட 13 தரப்புக்கள் தாக்கல் செய்திருந்தன.

இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்கு நொவம்பர் 13 ஆம் திகதியன்று இடைக்காலத் தடையினை விதித்தது.

இந்த நிலையில் குறித்த வழக்கினை விசாரணை செய்து வந்த பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட 07 பேரைக் கொண்ட நீதியரசர்கள் குழுவினர், இன்று தமது தீர்ப்பினை வழங்கினர்.

அந்த வகையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்தமையானது, அரசியலமைப்புக்கு முரணானது என்று, இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்