மனித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலை, பேலியகொடயில் கண்டெடுப்பு

🕔 December 13, 2018

னித உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலையொன்று பேலியகொட – துட்டகைமுனு மாவத்தையிலுள்ள தொழிற்சாலையொன்றினுள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

119 அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த அழைப்பொன்றினை அடுத்து, பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்த தலை கண்டெடுக்கப்பட்டது.

இன்று வியாழக்கிழமை அதிகாலை, மேற்படி மனிதத் தலை கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து புதுக்கடை 05ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவிக்கபபட்டதையடுத்து, மேற்படி துண்டிக்கப்பட்ட தலையை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்