ரணிலுக்கு பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்கும் வாக்கெடுப்பு: 117 பேர் ஆதரவு
நாடாளுமன்றில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்கும் வகையில் இன்று புதன்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவருக்கு சார்பாக 117 வாக்குகள் கிடைத்துள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த யோசனையின் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மேற்படி யோசனைக்கு எதிராக எந்தவொரு வாக்கும் பதிவாகவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதன்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி இந்த வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.