மாணவியை படம் பிடித்த நபருக்கு, மக்கள் கொடுத்த ‘தக்க’ தண்டனை

🕔 September 18, 2015

Kottawa bus - 011
ஸ்ஸில் பயணித்த மாணவியை ரகசியமாக படம் பிடித்த நபரொருவரை, சக பயணிகள் பிடித்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொட்டாவயிலிருந்து மொரகஹேன நோக்கி பயணிக்கும் 129 இலக்கம் இலக்க பஸ்ஸில் பயணித்த மாணவியையே, குறித்த நபர் படம் எடுத்தார்.

இதன்போது, சந்தேக நபரை நையப்புடைத்த பொதுமக்கள், ‘துஷ்பிரயோகக்காரர்’ என எழுதிய அட்டையை , குறித்த நபரின் வாயினால் கவ்விப் பிடித்திருக்கச் செய்ததோடு, பொலிஸார் வரும் வரை, அவரை கம்பமொன்றிலும் கட்டிவைத்திருந்தனர்.

பதின்மூன்று வயதான மாணவியொருவரையே மேற்படி நபர் படம்பிடித்துள்ளார்.

Comments