பிரதமர், அமைச்சரவைக்கு எதிரான வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்தி வைப்பு
பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள், அவர்களின் பதவிகளை வகிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளை அடுத்த வருடம் ஜனவரி 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
குறித்த மனுவை இன்று புதன்கிழமை நீதிமன்றம் எடுத்துக் கொண்ட போதே, அதன் மேலதிக விசாணைகளை ஒத்தி வைத்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் கையொப்பமிட்டு, மேற்படி மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இதேவேளை, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை ஆட்சேபித்து, மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.