அமில தேரருக்கு பணம் வங்கிய விவகாரம்: ரவியை கைதுசெய்யுமாறு பொலிஸில் முறைப்பாடு

🕔 December 12, 2018


லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் நிதியினை தம்பர அமில தேரருக்கு ரகசிய கணக்கின் ஊடாக வழங்கிய குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கவை கைது செய்யுமாறு, பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்க நிதியமைச்சராக பதவி வகித்த போது, 
லிட்ரோ எரிவாயு நிறுவனம் நிதியமைச்சின் கீழ் இருந்தது.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக விசாரணை நடத்தி உடனடியாக அவரை கைது செய்யுமாறு, ‘சத்திய கவேசகயோ’ அமைப்பினர் நேற்று செவ்வாய்கிழமை பொலிஸ் தலைமையகத்தில் மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடம் இருந்து தம்பர அமில தேரருக்கு மாதாந்தம் 95 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தமை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற விசாரணையில் அண்மையில் வெளிப்பட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்