கடாபியை உதாரணம் கூறி, ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பம்

🕔 December 11, 2018

னாதிபதி மைத்திபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த 
சமன் ரட்னபிரிய தொடர்பில் பொலிஸார் விசாரணை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் பிரகாரம் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினர் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

“லிபியாவில் கடாபிக்கு என்ன நடந்தது எனத் தெரியும்தானே,  நாங்கள் மக்களுடன் வீதிக்கு இறங்கினால் பல உயிர் சேதங்கள் கூட ஏற்படலாம்” என்று ஜனாதிபதியை அச்சுறுத்தும் வகையில், மேற்படி சமன் ரட்னபிரிய கருத்து வெளியிட்டிருந்தார்.

இவர் கூறிய இந்த கருத்து தொடர்பில் கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

‘புரவசி பல’ என்கிற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறிக் கொள்ளும் இவர், அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்