திருகோணமலையிலிருந்து, சர்வமதத் தலைவர்கள் காலிக்கு விஜயம்

🕔 December 11, 2018


– ஹஸ்பர் ஏ ஹலீம் –

மய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருகோணணலை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள், காலி மாவட்டத்துக்கு இன்று செவ்வாய்கிழமை பயணமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட எகட் கரித்தாஸ் நிறுவனம், இதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளது.

சமாதானம், நல்லிணக்கம், புரிந்துனர்வு மற்றும் பரஸ்பரம் உள்ளிட்ட விடயங்களை மூவின சமூகத்துக்கும் இடையில் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு பயணமாக இது அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பௌத்தம், இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த சர்வமதத் தலைவர்கள்; காலி மாவட்டத்தில் உள்ள கதிரேசன் கோயில், காலி கோட்டை, ஜப்பான் நாட்டின் உதவியில் நிர்மாணிக்கப்பட்ட சமாதான இணக்க பாகொட பௌத்த விகாரை, முஸ்லீம் பள்ளிவாயல், காலி சர்வதேச கிரிக்கட் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களை தரிசித்துள்ளனர்.

இதில் திருகோணமலை மாவட்ட எகட் கரித்தாஸ் நிறுவன திட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம். றிஸ்மி, காலி மாவட்ட கரித்தாஸ் நிறுவன முகாமையாளர் எம்.என்.ஈ. ஒஸ்டின் பெரேரா உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்